இன்று 28 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை தொடரும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

By Thanalakshmi V  |  First Published Oct 22, 2022, 10:31 AM IST

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 


இதுக்குறித்து வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்,” தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 28 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:Diwali: சென்னை விமான நிலையத்தில் நிரம்பி வழியும் பயணிகள்; டிக்கெட் விலை பல மடங்கு உயர்வு!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்தது.

மேலும் படிக்க:சுற்றுச் சுவரை உடைத்து கொண்டு திருச்சி விமான நிலையத்தில் நுழைந்த லாரி.. சிக்னல் சேதம்..!

click me!