சுற்றுச் சுவரை உடைத்து கொண்டு திருச்சி விமான நிலைய பகுதிக்குள் நுழைந்த லாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுச் சுவரை உடைத்து கொண்டு திருச்சி விமான நிலைய பகுதிக்குள் நுழைந்த லாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி காய் கறி ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை செந்தில் குமார் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், திருச்சி விமான நிலையம் அருகே சென்றுக்கொண்டிருந்த போது முன்னாள் சென்ற லாரியை முந்த முற்பட்ட போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
undefined
இந்த சுற்று சுவரின் அருகே இருந்த சிக்னல் சேதமடைந்தது. உடனே இந்த விபத்து தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொக்லைன் எந்திரம் லாரி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தால் சேதமடைந்த சிக்னலை சரி செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.