நெருங்கும் தீபாவளி பண்டிகை... மணப்பாறை மாட்டு சந்தையில் சூடுப்பிடித்த வியாபாரம்!!

By Narendran S  |  First Published Oct 19, 2022, 5:13 PM IST

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மணப்பாறையில் மாட்டு சந்தையில் வியாபாரம் சூடுப்பிடித்துள்ளது. 


தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மணப்பாறையில் மாட்டு சந்தையில் வியாபாரம் சூடுப்பிடித்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம். மாலை 4 மணிக்கு துவங்கும் இந்த சந்தை மறுநாள் புதன்கிழமை பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதில் கறவை மாடு, வண்டி மாடு, உழவுமாடு, வளர்ப்பு மாடு, ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுக்குட்டிகள் என விவசாயிகள் அதிகளவில் மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

இதையும் படிங்க: விபத்தில்லா தீபாவளிக்கு இதெல்லாம் பின்பற்ற வேண்டும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக காவல்துறை!!

Tap to resize

Latest Videos

undefined

இந்த சந்தைக்கு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி மணப்பாறை மாட்டு சந்தையில் வியாபாரம் சூடுப்பிடித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

அந்த வகையில் 1000 ஆடு, 1500 மாடுகளும் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஆடு குறைந்தபட்சம் ரூ.3500 முதல் 15 ஆயிரம் வரையும், கறவை மாடு குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதுவரை சுமார் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  

click me!