திருச்சி நீதிமன்றம் அருகே வாகன தணிக்கைளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 20 மூட்டை குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள ஐயப்பன் கோயில் அருகில் தனிப்படை ஆளுநர்களுடன் ஆய்வாளர் உமா சங்கரி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் வந்த புத்தூர் விஎன்பி தெருவை சேர்ந்த ஜெயராமன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அந்த நபரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களான ஹான்ஸ், ஷைனி, விமல், கணேஷ், கூலிப், ஆர் எம் டி, பால்ராஜ், போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் மூட்டைகளில் கடத்தி வந்துள்ளார்.
undefined
இவற்றை பறிமுதல் செய்த தனிப்படையினர் 20 மூட்டைகளில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ளகுட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜெயராமன் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.