திருச்சியில் 48 மணி நேரத்தில் 82 ரவுடிகள் கைது; சிங்கம் பட பாணியில் போலீஸ் அதிரடி வேட்டை

By Dinesh TGFirst Published Oct 10, 2022, 9:54 AM IST
Highlights

திருச்சி மாநகரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடபட்ட 82 குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் கைது செய்து மாநகர காவல் துறையினர் அதரிடி வேட்டையை நிகழ்த்தி ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
 

தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களின் மேலான உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க 48 மணி நேரம் ரவுடி மின்னல் வேட்டை-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்,  ரவுடிகள், குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய கஞ்சா வியாபாரி

அதன்படி, திருச்சி மாநகரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகள், குற்றவாளிகள், கொலை குற்றவாளிகள், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் என 82 நபர்களை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பொது அமைதியை பேணிக்காப்பத்தற்கும், நன்னடத்தை பிணையம் பெற வேண்டி 56 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், கொலை, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 20 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்து வந்த பிடியாணை குற்றவாளிகள் 6 பேர் என மொத்தம் 82 நபர்கள் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் தம்பி இறந்த சோகத்தில் அண்ணனும் தற்கொலை; சோகத்தில் மூழ்கிய கிராமம்

மேலும் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

click me!