இந்த 20 மாவட்டங்களில் நாளைக்கு மழை வெளுத்து வாங்கப் போகுது ! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

By Selvanayagam PFirst Published Sep 10, 2019, 11:43 PM IST
Highlights

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சின்னகல்லாறு, வால்பாறை ஆகிய ஊர்களில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தர்ம புரி, சேலம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய 20 மாவட்டங்களில் லேசானது முதல் பலத்த  மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

இதே போன்று புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வருகிற 14-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை  பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!