மக்களே உஷார் !! இன்று கனமழை.. 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை.. வானிலை அப்டேட்..

By Thanalakshmi V  |  First Published Jul 29, 2022, 2:18 PM IST

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
 


இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

29.07.22: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tap to resize

Latest Videos

30.07.22: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி திருநெல்வேலி மற்றம்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் 4 பேருக்கு குரங்கு அம்மை? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்..!

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ .அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

click me!