இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முடிவை மாற்றியது தென்காசி மாவட்ட நிர்வாகம்.
வழக்கம்போல் இன்று பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் கூறி வந்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 4 மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க;- தத்தளிக்கும் தென் மாவட்டங்களுக்கு படகுகள், ஹெலிகாப்டர்கள் எல்லாம் வருது.. நன்றி சொன்ன நிதியமைச்சர்
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், திரும்பிய பக்கம் எல்லாம் தீவு போல் தண்ணீராக காட்சியளித்தது. முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 4 மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். வரலாறு காணாத கனமழையால் 4 மாவட்டங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளன.
இதையும் படிங்க;- தென் மாவட்டங்களில் கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தொடர் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முடிவை மாற்றியது தென்காசி மாவட்ட நிர்வாகம். ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.