பல்லடம் அருகே மதுபோதையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு கிராமத்தில் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் அவர்களது ஆறு வயது மகளுடன் மகனும் இருந்துள்ளான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட போதை ஆசாமி ஒருவன் சிறுவனை சாக்லேட் வாங்க கடைக்கு அனுப்பி விட்டு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே வீடு திரும்பிய பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தது குறித்து தெரிவித்ததன் அடிப்படையில் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் தொடர்பாக போக்சோ உள்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் வீட்டில் தனியே இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்த காமக்கொடூரனை தேடி வந்தனர். இந்தநிலையில் குற்றவாளியை பிடிக்க திருப்பூர் SP சாமிநாதன் உத்தரவின் பேரில் பல்லடம் DSP விஜயகுமார் மேற்பார்வையில் ஆய்வாளர் பர்வீன் பானு தலைமையில் மூன்று தனிபடைகள் அமைக்கப்பட்டு தேடும்பணி முடுக்கி விடப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், பொங்கலூர் குருநாதன்பாளையத்தை சேர்ந்த ஜோசப் பிரதாப் (வயது 27) என்பவன் தான் இந்த செயலில் ஈடுபட்டது என்பதும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, இரண்டு குழந்தைகள் இருப்பதும் குடும்பத்துடன் குருநாதன் பாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் சம்பவத்தன்று மது போதை தலைக்கேறியதால் எங்கு செல்வது என்பது தெரியாமல் சுற்றித்திரிந்தவன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திறந்திருந்த வீட்டினுள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதையடுத்து பிடிபட்டுள்ள ஜோசப் பிரதாப் மீது போக்சோ உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் பல்லடம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து பிடிப்பட்டவனுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே பல்லடம் பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.