முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது கோர விபத்து; சொகுசு கார் மோதி 6 பேர் படுகாயம்

Published : Dec 09, 2023, 11:03 PM IST
முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது கோர விபத்து; சொகுசு கார் மோதி 6 பேர் படுகாயம்

சுருக்கம்

பல்லடம் அருகே முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற கார் எதிரே வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கோர விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற இனோவா சொகுசு கார் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிரே பொங்கலூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் மற்றும் பயணிகள் ஆட்டோவில் பயணித்த 4 பேர் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!