சென்னையில் விடிய, விடிய நடந்த சம்பவம்… மக்கள் பட்ட அவஸ்தை இருக்கே… அப்பப்பா…!

Published : Sep 22, 2021, 07:01 AM IST
சென்னையில் விடிய, விடிய நடந்த சம்பவம்… மக்கள் பட்ட அவஸ்தை இருக்கே… அப்பப்பா…!

சுருக்கம்

சென்னையில் நேற்றிரவு விடிய, விடிய மழை கொட்டியதால் பல இடங்களில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சென்னை: சென்னையில் நேற்றிரவு விடிய, விடிய மழை கொட்டியதால் பல இடங்களில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

எங்கு மழை பெய்தாலும் மக்கள் மகிழ்வார்கள்… ஆனால் சென்னையில் மழை பெய்தால் மக்களின் மனநிலை வேறு ஏதோ ஒன்றை சிந்திக்கும். காரணம்… அங்கு மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இன்னமும் ஸ்திரமாக போடப்படாததே காரணம் என்று கூறலாம்.

அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதுபோலவே நேற்றிரவு பல மாவட்டங்களில் மழை கொட்டியது.

குறிப்பாக தலைநகர் சென்னையில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் பல இடங்களில் மழைநீர் வழிந்தோடியது. மழைநீர் காரணமாக நள்ளிரவு நேரங்களில் வாகனங்களில் பயணித்தோர் கடும் அவதிக்கு ஆளாகினர்.

பெரும்பாலான சாலைகளில் மழைநீர் நிரம்பி ஓடுவதால் வாகன ஓட்டிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மழை ஒரு வழி பண்ணி இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டியது.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!