சித்தாளை கரெக்ட் செய்த மேஸ்திரி.. வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்..!

Published : Sep 21, 2021, 07:00 PM IST
சித்தாளை கரெக்ட் செய்த மேஸ்திரி.. வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்..!

சுருக்கம்

 வேலை செய்யும் இடத்தில் பாரதிக்கும், காவனூர் பகுதியை சேர்ந்த சரிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

ஆற்காடு அருகே கள்ளக்காதல் ஜோடி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (35) கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி, 2 மகள் உள்ளனர். புதிய தெரு வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் சரிதா (34)கட்டிட தொழிலாளி. இவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் பாரதிக்கும், காவனூர் பகுதியை சேர்ந்த சரிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்ததையடுத்து இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லையாம். கடந்த 2 நாட்களாக பாரதியும், சரிதாவும் திடீரென மாயமானார்கள் அவர்களை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், காவனூர் அருகே உள்ள புங்கனூர் வெள்ளக்குளம் மலையடிவாரத்தில் உள்ள ஒரு மரத்தில் ஆண், பெண், சடலங்கள் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை  இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரடிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலமாக கிடந்தவர்கள் காணாமல் போன பாரதி மற்றும் சரிதா என்பது தெரியவந்தது. 

PREV
click me!

Recommended Stories

லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. வேலூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
வேலூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை! மோட்டர், செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.!