தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் சின்னையன் (62) விவசாயி. இவரது மனைவி வீரம்மாள் (55). கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி சின்னையன், வீரம்மாளுக்கு இடையே மீண்டும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டது.
தஞ்சை அருகே குடும்ப தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் சின்னையன் (62) விவசாயி. இவரது மனைவி வீரம்மாள் (55). கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி சின்னையன், வீரம்மாளுக்கு இடையே மீண்டும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டது.
அப்போது, கணவன் மீது மிகுந்த கோபத்தில் இருந்த வீரம்மாள் வீட்டில் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை பாத்திரத்துடன் எடுத்து வந்து சின்னையன் மீது ஊற்றி உள்ளார். இதில் உடல் முழுவதும் வெந்து படுகாயத்துடன் துடி துடித்த சின்னையா கதறி உள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சின்னையன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசர் வழக்குப்பதிவு செய்து வீரம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாலி கட்டிய கணவனை வெந்நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.