ஆன்லைன் வகுப்பை புறக்கணித்து விட்டு செல்போனில் கேம் விளையாடியதால் ஆத்திரமடைந்த அவரது தாய் பார்த்திபனை திட்டி அவனிடமிருந்து செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார். இதனால், கோபித்துக்கொண்டு பார்த்திபன் கடந்த 4ம் தேதி காலை வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
கும்பகோணத்தில் செல்போனில் கேம் விளையாடியதை தாய் தட்டிக்கேட்டதால் 10ம் வகுப்பு மாணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் பார்த்திபன் (15). கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா பரவல் காரணமாக செல்போனில் ஆன்லைன் மூலம் படித்து வருகிறார். இந்நிலையில், தினமும் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காமல் பார்த்திபன் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று ஆன்லைன் வகுப்பை புறக்கணித்து விட்டு செல்போனில் கேம் விளையாடியதால் ஆத்திரமடைந்த அவரது தாய் பார்த்திபனை திட்டி அவனிடமிருந்து செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார். இதனால், கோபித்துக்கொண்டு பார்த்திபன் கடந்த 4ம் தேதி காலை வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
undefined
இதனால், பதற்றமடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, பெற்றோர் மகனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை மாணவனின் சடலம் காவிரி ஆற்றில் மிதப்பாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.