அட பாவிகளா.. வரதட்சணை கொடுமையால் 7 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை..!

By vinoth kumar  |  First Published Sep 12, 2021, 5:36 PM IST

தஞ்சாவூர் மேலவஸ்தாவடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கும், உதயா(32) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.


தஞ்சாவூரில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கணவர், மாமனார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் மேலவஸ்தாவடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கும், உதயா(32) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்த உதயாவை முத்துக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி மனவேதனை அடைந்த உதயா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக உதயாவின் தந்தை சந்திரசேகருக்கு முத்துக்குமார் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு கதறிய படி வந்த தந்தை தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்த தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார் அவரது தந்தை மனோகர்(60) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

click me!