சென்னையிலும் பலத்த காற்றுடன் விடிய, விடிய கொட்டி வரும் கனமழை !! சென்னை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !!!

First Published Dec 1, 2017, 7:15 AM IST
Highlights
heavy rain ...chennai madurai 6 districts school leave


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை கொட்டி வருகிறது. தொடர்ந்து மழையால் சென்னை மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தொடங்கி பெய்து வருகிறது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூ மாவட்டங்களில் நலல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில்  தென் மாவட்டங்களில் குறைவான அளவே மழை பெய்யது. இந்நிலையில்
கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக்கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  ஒகி என்ற தீவிர புயலாக மாறி, தென் மாவட்ட கடலோர பகுதிகளை புரட்டி எடுத்து வருகிறது.

இந்த ஒகி புயல் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நள்ளிரவில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அசோக்பில்லர், கத்திபாரா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.

சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய மழை பகலில் விட்டுவிட்டு பெய்து வந்தது. இந்நிலையில்  நேற்று  நள்ளிரவில் திடீரென பலத்த காற்றுடன் கன மழை  கொட்டத் தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய கனமழை கொட்டி வருவதால் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் ,வாலாஜாபாத் பகுதிகளிலும், நீலகிரி மாவட்டம் உதகை , குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் விழுப்புரம், தேனி, மதுரை , திண்டுக்கல் சேலம்    மாவட்ட பள்ளிகளுக்கும் கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




 

tags
click me!