தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுபெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி வரும் நாட்களில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
இதையும் படிங்க: School Colleges Holiday: ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!
இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.