Suicide: தீராத கடன் தொல்லை; கிருஷ்ணகிரியில் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை

Published : Jul 19, 2024, 11:25 PM IST
Suicide: தீராத கடன் தொல்லை; கிருஷ்ணகிரியில் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடன் தொல்லையால் தாய், 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்நதவர்கள் ரமேஷ், உஷா தம்பதி. ரமேஷ் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு நிவேதா, ஷர்மிளா என இரு மகள்கள் இருந்தனர். மகள்கள் இருவரும் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 12, 8ம் வகுப்பு படித்து வந்தனர். ரமேஷ்க்கு போதிய வருமானம் இல்லாத நிலையில், கடன் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளனர்.

கடலூரை அதிர வைத்த 3 பேர் கொலை சம்பவம்; தாயின் தற்கொலைக்கு காத்திருந்து பழி தீர்த்த இளைஞர்

இதனிடையே இன்றைய தினம் நகைக்கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த கடைசி தேதி என்று சொல்லப்படுகிறது. இதற்காக ரமேஷ்க்கு ரூ.5 ஆயிரம் தேவைப்பட்ட நிலையில் வெளியூரில் வசித்து வரும் தனது சசோதனை தொடர்பு கொண்டு ரமேஷ் பண உதவி கேட்டுள்ளார். தொலைபேசியில் சகோதரர்கள் இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சூழலில் ரமேஷ்ன் வீட்டில் வழக்கத்திற்கு மாறாக சண்டையிடும் சத்தம் கேட்டுள்ளது.

Egmore Railway Station: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு? உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்திய கடிதம்

செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பா ரமேஷ்ன் சசோதரர், தனது தந்தைக்கு தகவல் சொல்லி ராமேஷின் வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார். அதன் அடிப்படையில்  ரமேஷின் வீட்டிற்கு வந்த அவரது தந்தை வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உஷா மற்றும் இரு மகள்கள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 3 உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மரு்ததுவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டை விட்டு வெளியேறிய ரமேஷை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

35 வயது ஆன்ட்டி மீது க.காதல்..! ஆசை ஆசையாய் இரவு வீட்டிற்கு சென்ற போது நடுரோட்டில் ஹரீஷ் அலறல்..! நடந்தது என்ன?
கே.பி முனுசாமி கிட்ட தோற்றா உங்க பதவி காலி..! மாவட்ட செயலாளர்களை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்