Accident: பயணத்தின் போது அசதியில் உறங்கிய ஓட்டுநர்? ஓசூரில் தடுப்பு சுவற்றில் லாரி மோதி ஒருவர் பலி

By Velmurugan s  |  First Published Jun 6, 2024, 12:05 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலை சாலையின் தடுப்புச் சுவற்றில் மோதி லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி பகுதியைச் சேர்ந்த சாதிக் எனபவர் சூளகிரியில் இருந்து கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை ஏற்றுமதி செய்து, வேலூர் மற்றும் ஆற்காடு பகுதிகளில் உள்ள தினசரி சந்தைகளில் விற்பனை செய்துவிட்டு இன்று அதிகாலை மீண்டும் சூளகிரி நோக்கிச்சென்று கொண்டிருந்தார்.

பழனி அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்; இளசுகளுக்கு முத்தங்களை பறக்கவிட்ட அழகிகள்

Tap to resize

Latest Videos

undefined

அப்போது திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இருந்த இரும்பு தடுப்பு வேலியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ADMK : கட்சியையும், ஆட்சியை ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்.! ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு

இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் நொறுங்கியதில், லாரியின் இடிபாடுகளில் சிக்கி லாரி ஓட்டுநர் சாதிக் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநரின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

click me!