‘வீட்டைவிட்டு வெளிய வராதீங்க... சென்னையில் காட்டு காட்டுன்னு காட்டும் மழை

By sathish kFirst Published Nov 21, 2018, 1:06 PM IST
Highlights

நேற்று அதிகாலை 3 மணிக்கு சென்னையில் தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து இன்னும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. இந்த மழை மேலும் 24 மணிநேரம் வரை நீடிக்கக்கூடும் என்றும் வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி கூடுதல் வலுப்பெறும் என்பதால் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சாலிகிராமம், ராமாபுரம், வளசரவாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், அயனாவரம், புழல், கொரட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நான்ஸ்டாப்பாக  மழை பெய்து வருகிறது.

புறநகர் பகுதிகளான அம்பத்தூர் பல்லாவரம், தாம்பரம், அடையாறு, ஒ.எம்.ஆர், இ.சி.ஆர், மேடவாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புயல் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் புயல் பாதித்த நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்கிறது.

click me!