சூடு பிடிக்கும் நாய்க்கறி விவகாரம்..! சோதனையில் தெரிய வந்தது என்ன தெரியுமா..?

By thenmozhi gFirst Published Nov 21, 2018, 11:06 AM IST
Highlights

சூடு பிடிக்கும் நாய்க்கறி விவகாரம்..! சோதனையில் தெரிய வந்தது என்ன  தெரியுமா..?

சூடு பிடிக்கும் நாய்க்கறி விவகாரம்..! சோதனையில் தெரிய வந்தது என்ன  தெரியுமா..?

கடந்த 18 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்தடைந்த மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 பெட்டிகள் பார்சல் வந்தது. அதனை சோதனை செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அது நாய்க்கறி என கண்டறிந்து சென்னை கொடுங்கையூரில் அதனை ஒரே இடத்தில் கொட்டி எரித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு புறம் கொண்டுவரப்பட்ட அந்த கறிகள் ஆட்டுக்கறி என கூறி ஒரு பெண் உட்பட 25 க்கும் மேற்பட்டவர்கள் அந்த கறியை தங்களுக்கு தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இது நாய் கறியா அல்லது வேறு எதாவது கறியா..? மாட்டுக் கறியுடன் நாய்க்கறி சேர்த்து அனுப்பப்பட்டு உள்ளதா..? என பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வாருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கறியின் சில துண்டுகளை எடுத்து வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமானை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அது எந்த கறி என்பதை கண்டுப்பிடிக்க முடியாமல் ஆய்வாளர்கள் திணறுகின்றனர். எனவே இதற்காக தனிப்படை அமைத்து, டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அடுத்த இரண்டு நாட்களில் உண்மை நிலை தெரியவரும் என கூறப்படுகிறது.

மேலும் இதுநாள் வரை தொடர்ச்சியாக இதே போன்று பார்சல் வந்து உள்தாகவும்,  அதுவும் மீன் என குறிப்பிட்டு தான் இந்த பார்சல் செய்யப் பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் இவ்வாறு கொண்டுவரப்படும் கறிகள் கறி கணேஷ் என்ற பெயரில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இதுநாள் வரை எந்த கறி என்றே தெரியாமல் அழுகிய கறிகளை தான் நாம் உண்டு வந்து உள்ளோம் என்பதை தெளிவாக புரித்துக்கொள்ள முடிகிறது.

மேலும் இவர் கொண்டுவரப்பட்ட கறிகள் சாதாரண ரோடு கடை முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை அனைத்து இடத்திற்கும் தினமும் சப்ளை செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம் ஒரு ஓட்டலுக்கு கூட சீல் வைக்கப்பட்டது. அப்படி என்றால் எந்த ஒரு அதிகாரிகளுக்கும் தெரியாமல் தான் இத்தனை நாள் இது போன்ற பார்சல் வந்துக்கொண்டு உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

இதில் மறைந்திருக்கும் உண்மை என்ன..? இந்த பிராடு வேலைக்கு பின் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்...
   

click me!