அடுத்த புயலுக்கான தேதி ..! எங்கெல்லாம் கொட்டப்போகுது மழை தெரியுமா..?

By thenmozhi gFirst Published Nov 21, 2018, 9:58 AM IST
Highlights

மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வரைக்கும் நல்ல மழை இருக்கும் என, வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். 
 

மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வரைக்கும்  நல்ல மழை இருக்கும் என, வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார். 

இந்த தாழ்வு நிலை சேலம் நோக்கி நகர்வதால், தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அதே சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளார் 

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வட உள்மாவட்டங்களில் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு ,சேலம் உள்ளிட்ட மாடட்டங்களில் நல்ல மழை இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. அதே போன்று வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும், அதே வேளையில் வரும் 29 ஆம் தேதிக்கு பிறகு புயல் உருவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்து உள்ளார்

 

சென்னையை பொறுத்தவரை இரவு முழுக்க விட்டு விட்டு நல்ல மாழை பெய்தது. வானம் தொடார்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மழை சாரல்  அதிக அளவில் உள்ளது.
 

click me!