நாய் வாலா? ஆட்டு வாலா? நீடிக்கும் சர்ச்சை...!

By vinoth kumarFirst Published Nov 21, 2018, 12:15 PM IST
Highlights

சென்னைக்கு ரயிலில் வந்த இறைச்சி நாயா? ஆடா? சர்ச்சை நீடித்து வருகிறது. நாய் அல்ல ஆடு என இறைச்சி தான் விற்பனையாளர்கள் உறுதியளித்துள்ளனர். நீளமான வாலை வைத்து நாய் இறைச்சி என கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வால் நீளமான ஆடுகளை வரிசையாக வெட்டும் காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னைக்கு ரயிலில் வந்த இறைச்சி நாயா? ஆடா? சர்ச்சை நீடித்து வருகிறது. நாய் அல்ல ஆடு என இறைச்சி தான் விற்பனையாளர்கள் உறுதியளித்துள்ளனர். நீளமான வாலை வைத்து நாய் இறைச்சி என கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வால் நீளமான ஆடுகளை வரிசையாக வெட்டும் காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கடந்த 17-ம் தேதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பின்னர் அந்த ரயில் காலை 10.40 மணிக்கு மன்னார்குடிக்கு நோக்கி புறப்பட்டது. அப்போது ஊழியர்கள் இறக்கி முகவரியை சரிபார்த்து கொண்டிருந்தனர். அப்போது ரயில் பெட்டிகளில் இருந்து இறக்கப்பட்ட சில பெட்டிகளில் முகவரி எதுவும் தெளிவாக இல்லை. மேலும், அந்த பார்சல்களில் இருந்து துர்நாற்றம் மற்றும் ஈக்களும் மொய்த்திருந்தது. 

இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து அந்த பெட்டிகளை திறந்து பார்த்தபோது இறைச்சிகள் தோல் உரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு இருந்தது. இது நாய் கறியாக இருக்கலாம் ஆகையால் இதனை கொடுங்கையூரில் மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று, அந்த கழிவுகள் அழிக்கப்பட்டன. 

ஆனால், திடுக்கிடும் திருப்பமாக, அது நாய்க்கறி கிடையாது. ஆட்டு கறி என்று, ஓட்டல் உரிமையாளர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இது நாய் கறியா அல்லது வேறு எதாவது கறியா..? மாட்டுக் கறியுடன் நாய்க்கறி சேர்த்து அனுப்பப்பட்டு உள்ளதா..? என பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கறியின் சில துண்டுகளை எடுத்து டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அடுத்த இரண்டு நாட்களில் உண்மை நிலை தெரியவரும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இதுதான் ராஜஸ்தானில் ஆடு என்றும், இதன் வால் பகுதி நாயைப் போலவே நீளமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். இது உண்மைதானா என்று ஆய்வு செய்து பார்த்தபோது இதுபோல ஆடுகள் இருப்பதும் தற்போது தெரியவருகிறது. நாய் அல்ல ஆடு என இறைச்சி தான் விற்பனையாளர்கள் உறுதியளித்துள்ளனர். நீளமான வாலை வைத்து நாய் இறைச்சி என கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வால் நீளமான ஆடுகளை வரிசையாக வெட்டும் காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

click me!