கொரோனா பாதிப்பு குறைந்தாலும் ஓரிரு மாதங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்க தமிழ்நாட்டில் கடந்த 2021 ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்தவும் அனைத்து தரப்பு மக்களும் எளிதில் போட்டுக்கொள்ளும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் இதுவரை 23 மெகா தடுப்பூசி முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளது. சனிக்கிழமையான இன்று 24 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. மேலும் சென்னை பட்டினப்பாக்கத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
undefined
மேலும் படிக்க: "மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்" மறுபடியும் முதல்ல இருந்தா..? அப்போ லாக்டவுன் எப்போ ?
நாடு முழுவதும் ஜனவரி மாதம் கொரோனா மூன்றாம் அலை தொடங்கியது. தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் தினசரி கொரோனா தொற்று 30,000 ஐ கடந்து -பதிவானது. பின்னர், பிப்ரவரி மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 200க்கும் கீழ் குறைய தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க: India Corona: 2 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த கொரோனா..இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,614..
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் நேற்று தான் கொரோனாவால் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை. தினசரி கொரோனா உயிரிழப்பு நேற்று பூஜ்ஜியமாக இருந்தது. இந்நிலையில் இன்று பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், ஓரிரு மாதங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் 2 வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய 1.33 கோடி பேருக்காகவே தமிழ்நாடு அரசு மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 15-18 வயதுக்கு உட்பட்டவர்களில் 33.46 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் தவணையாக 28.04 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலமாக செலுத்தப்பட்டு இருக்கிறது.15-18 வயதுக்கு உட்பட்டவர்களில் 83.8% பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி உள்ளனர் எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க: TN Corona: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா… கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு இல்லை!!
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 1291 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக குறைந்துள்ளது. 42,241 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 112 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,461 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 327 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,899 ஆக உள்ளது.