தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவரது மகள் இந்து பிரியா(18). இவர் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது தாயார் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்கு மகளை எழுப்ப வந்துள்ளார். அப்போது, மகள் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி துடித்தார்.
கல்லூரியில் செய்யாத தவறுக்கு பேராசியர் மற்றும் பேராசிரியை ஒருவர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகள் உடலை பார்த்து கதறி தாய்
தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவரது மகள் இந்து பிரியா(18). இவர் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது தாயார் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்கு மகளை எழுப்ப வந்துள்ளார். அப்போது, மகள் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி துடித்தார்.
இதையும் படிங்க;- ஒரு கவர்னர் இப்படி பேசலாமா..? ரொம்ப வேதனையா இருக்கு.. சின்மயி ஆதங்கம்..!
போலீஸ் விசாரணை
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இந்துபிரியா உடலை கீழே இறக்கினர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்து பிரியா நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை அழைத்த பேராசிரியர் ஒருவர், கல்லூரிக்கு அனுமதியின்றி செல்போன் கொண்டுவந்துள்ளாய். எனவே ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடு என கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து பிரியா, தான் செல்போன் கொண்டு வரவில்லை என்று கூறியுள்ளார். ஆனாலும், விடாமல் அந்த மாணவியை திட்டி, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
பரபரப்பு கடிதம் சிக்கியது
மேலும், இந்துபிரியா அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், நான் செய்யாத தவறுக்கு என்னிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி விட்டனர். எனவே நான் தற்கொலை செய்கிறேன்.எனது சாவுக்கு ஒரு பேராசிரியரும், ஒரு பேராசிரியையும் தான் காரணம் என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் கல்லூரியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- மெரினா பீச்சில் கண்ட இடத்தில் கை வைத்து அத்துமீறிய காதல் ஜோடி.. தட்டிக்கேட்ட வக்கீல்களுக்கு மண்டையில் 5 தையல்