பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற 10 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஒரு வார்டில் வெற்றி பெற்ற பாஜகவுடன் சேர்த்து 9 வார்டுகளில் வென்ற அதிமுக இந்த தலைவர் பதவியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சபாநாயகரின் தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சி என்பதால், தலைவர் பதவியை கைப்பற்ற திமுக முயற்சி செய்து வருகின்றனர்.
திசையன்விளை பேரூராட்சியில் பதவியேற்றால் மண்டையை உடைப்போம் என போனில் மிரட்டல் வந்ததையடுத்து ஹெல்மேட் அணிந்து அதிமுக கவுன்சிலர் பதவியேற்க வந்தனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆளுங்கட்சியான திமுக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் தேர்தல் நடைபெற்றது. இதில், திசையன்விளை பேரூராட்சிகளை அதிமுக கைப்பற்றியது. மற்றவைகளை ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளனர். அதற்கான பதவியேற்பு விழா அந்தந்த மாவட்டங்களில் உள்ள அலுவலங்களில் நடைபெற்று வருகிறது. திசையன்விளை பேரூராட்சியை பொறுத்தவரையில் 18 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், அதிமுக 9, பாஜக, தேமுதிக 1, திமுக 2, காங்கிரஸ் 2 , சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற 10 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஒரு வார்டில் வெற்றி பெற்ற பாஜகவுடன் சேர்த்து 9 வார்டுகளில் வென்ற அதிமுக இந்த தலைவர் பதவியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சபாநாயகரின் தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சி என்பதால், தலைவர் பதவியை கைப்பற்ற திமுக முயற்சி செய்து வருகின்றனர். இதனால், தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், பேரூராட்சி தலைவராக போட்டியிட்டாலோ, பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டாலோ அவர்களது மண்டை உடையும் என தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. இதன் காரணமாக அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் ஹெல்மேட் அணிந்து கொண்டு பதவியேற்று கொண்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் அப்பாவுவின் கோட்டையாக கருதப்படும் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி திசையன்விளை பேரூராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.