குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கனமழை பெய்து வருவதன் காரணமான சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. நேற்று மதியம் கடல் பகுதியில் இறங்க தொடங்கியதை அடுத்து, நேற்று மதியத்துக்கு பிறகு பலத்த மழை பெய்ய தொடங்கியது.
அதன்படி கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, காரைக்கால் மற்றும் புதுச்சேரி, பகுதிகளில் கனமழை பெய்தது. ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் ஆந்திராவின் நெல்லூர் முதல் தமிழகத்தின் நாகர்கோவில், திருநெல்வேலி, திசையன்விளை வரை தமிழகம் முழுவதும் நேற்று மழை கொட்டி தீர்த்தது. வட மாவட்டங்களை பொறுத்தவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் விடாமல் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
சேலம், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட கல்வியாளர் அறிவித்துள்ளார். உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு சூழ்நிலையை பொறுத்து தலைமை ஆசிரியர் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.