தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த ராமலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி மகேஷ்வரி (45). இவருக்கு மாரீஸ்வரன் என்ற மகனும், கார்த்திகா(20) என்ற மகளும் உள்ளனர். பெருமாள்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மாரீஸ்வரன் கூலி வேலைக்கு சென்று அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.
சங்கரன்கோவில் அருகே மகள் திருமணத்திற்காக ஜவுளி எடுக்க சென்றபோது மினி பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த ராமலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மனைவி மகேஷ்வரி (45). இவருக்கு மாரீஸ்வரன் என்ற மகனும், கார்த்திகா(20) என்ற மகளும் உள்ளனர். பெருமாள்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மாரீஸ்வரன் கூலி வேலைக்கு சென்று அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், மகள் கார்த்திகாவுக்கு வருகிற 24-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பேருந்து நிறுத்தம் வந்ததை அடுத்து, மகேஸ்வரி கீழே இறங்க முயற்சி செய்தார். அப்போது நிலைதடுமாறி, பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டு வழியாகக் கீழே விழுந்தார். விபத்து ஏற்பட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையத்து, விபத்தில் சிக்கிய மகேஸ்வரியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பேருந்தில் பயணம் செய்தபோது கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.