மீண்டும் பரபரப்பை கிளப்பும் சுவாதி – ராம்குமார் மரண வழக்கு…. மறுவிசாரணை நடத்த கிருஷ்ணசமி வலியுறுத்தல்.!

By manimegalai aFirst Published Oct 3, 2021, 4:51 PM IST
Highlights

சிறையில் மின்சார வயரை கடித்து ராம்குமார் உயிரிந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது உடம்பில் அதற்கான ஆதாரங்கள் இல்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

சிறையில் மின்சார வயரை கடித்து ராம்குமார் உயிரிந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது உடம்பில் அதற்கான ஆதாரங்கள் இல்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

 

கந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமாரை கைது செய்த போலீஸார் கழுத்தில் அறுபட்ட காயங்களுடன் அவரை சிறையில் அடைத்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் விசாரணை நடந்துகொண்டிருந்த போதே மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராம்குமார் மரணத்தின் போது, அவர் கொலை செய்யப்பட்டதாக பல்வேறு அமைப்புகள் குற்றஞ்சாட்டின. அடுத்ததாக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைய, அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் பரபரப்புகள் தமிழக மக்களை சுவாதி, ராம்குமார் மரண வழக்குகளை மறக்கடிக்க செய்தது. இந்தநிலையில் 5 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் புதிய திருப்பமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என ஹிஸ்டோபாதாலஜி நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்தநிலையில் ராம்குமார் மரண வழக்கு குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் சந்தேகம் எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்ததாக சொல்லப்படுவதில் உண்மையில்லை என இப்போது தெரிய வந்துள்ளது. எனவே ராம்குமார் உயிரிழந்த சம்பவத்தில் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

click me!