தென்காசியில் பயங்கரம்... 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக்கொன்று தாய் தற்கொலை..!

Published : Jul 14, 2021, 11:25 AM IST
தென்காசியில் பயங்கரம்... 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக்கொன்று தாய் தற்கொலை..!

சுருக்கம்

தென்காசியில் குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்று விட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியில் குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளை தீ வைத்து எரித்துக் கொன்று விட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் செக்கடியூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (32). இவருக்கும், தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மகள் கௌரி (26) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கீர்த்தனு (5) என்ற ஆண் குழந்தையும், இலக்கியா (2) என்ற பெண் குழந்தையும் உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கோபித்துக்கொண்டு  கௌரி தாய் வீட்டிக்கு சென்றுவிட்டார். 

இதனிடையே,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுரேஷ் மீது  கொளரிஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சுரேசை எச்சரித்து கௌரிவுடன் அனுப்பி வைத்தனர். இதையடுத்து கணவன்-மனைவி ஒன்றாக செக்டியூரில் வாழ்ந்து வந்தனர். நேற்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், கோபித்துக் கொண்டு சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த கௌரி தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள் சென்று, கதவை பூட்டிக் கொண்டார். பின்னர் சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை 2 குழந்தைகள் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில், கௌரி மற்றும் 2 குழந்தைகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்