நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் நீஷ் (47). நீதிபதியான இவர் மதுரை நீதிமன்றத்தில் பணிபுரிந்து பின்னர் வள்ளியூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த மாதம் 5-ம் தேதி நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நீஷ் பணி அமர்த்தப்பட்டார்.
undefined
இந்நிலையில், பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதியானது. பின்னர், வென்டிலேட்டர் வசதிக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவர் கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதியாக பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.