நெல்லை செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திய கொரோனா ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், ஒருபுறம் தொற்று பரவல் பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரிக்க தொடங்கியது. சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பொதுமக்கள் பொது இடங்களில் கூடியதாலும், அரசியல் கட்சிகளின் பிரசாரமும் தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தன.
முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதால் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 4000ஐ நெருங்கி வருகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பே வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்தது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பேட்டை, செந்தமிழ் நகரில் சுகாதாரத்துறை அதகாரிகள் வீடு வீடாக சென்றாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டர், அப்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, 13 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறிந்து அவர்களுக்கும் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த தெருக்களை அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.