கொரோனா பரவலா? ஒரே பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல்.. அதிர்ச்சியில் பெற்றோர்..!

By vinoth kumarFirst Published Sep 17, 2021, 5:10 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் பெருமளவு குறைந்து வந்ததையடுத்து  செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி இருந்த போதிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

ஆலங்குளம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு அடுத்தடுத்து காய்ச்சல் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் பெருமளவு குறைந்து வந்ததையடுத்து  செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி இருந்த போதிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாறாந்தையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 450 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் திடீரென நேற்று மாணவர்கள் 22 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனே சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த பரிசோதனையின் முடிவு இன்னும் வராத நிலையில் இன்று மேலும் 30 மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருவதால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கொரோனா அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து, அந்த பள்ளி முழுவதும் சுகாதாரத்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

click me!