தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது வரும் நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.
கனமழை காரணமாக தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது வரும் நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டது.
undefined
தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வருவதால் சென்னை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருவாரூர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில், கனமழை காரணமாக, இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.