நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நெல்லை டவுனில் ஒரே தெருவில் 72 பேருக்கு நோய் பாதிப்பு காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நெல்லை டவுனில் ஒரே தெருவில் 72 பேருக்கு நோய் பாதிப்பு காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா வைரசின் அச்சம் தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில், புதிய வகை வைரஸான ஒமிக்ரான் தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நெல்லை மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர்.
undefined
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக மழை பாதிப்பினால் நெல்லை மாவட்டத்தில் மஞ்சள் காமாலை பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வன்னிக்கோனேந்தல், அம்பை, வாகைகுளம், சேரமன்மகாதேவி, மேலச்செவல், மானூர், கண்டியப்பேரி உள்ளிட்ட இடங்களில் நோயின் தாக்கம் ஒரளவுக்கு காணப்படுகிறது. குறிப்பாக நெல்லை டவுன் புட்டாரத்தி அம்மன் கோயில் தெருவில் மட்டுமே இந்நோயால் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 தினங்களில் நெல்லை டவுன் சாலியர் தெருவில் 8 வயது குழந்தையும், புட்டாரத்தி அம்மன் கோயில் தெருவில் பிளஸ் 2 மாணவியும் இந்நோய்க்கு உயிரிழந்தனர். தாழையூத்தில் மஞ்சள் காமாலை முற்றியதில் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
நெல்லை டவுன் புட்டுக்கடைத்தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு, பர்வத ராஜாசிங் தெரு உள்ளிட்டவற்றில் 50க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனநெருக்கடி மிகுந்த மேலப்பாளையம்இ பேட்டையிலும் இந்நோயால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாரங்களில் சிலர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.