ஒழுங்கா படிடா... படிடா... மாணவனிடம் மண்டியிட்டு கெஞ்சும் தலைமை ஆசிரியர்!

 
Published : Jan 25, 2018, 09:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஒழுங்கா படிடா... படிடா... மாணவனிடம் மண்டியிட்டு கெஞ்சும் தலைமை ஆசிரியர்!

சுருக்கம்

Head master to kneel down his irregular student

பனிரென்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒழுங்காக படிடா.. படிடா என்று மண்டியிட்டு கையெடுத்து கும்பிட்டு கேட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரளாகி வருகின்றது.

பள்ளியில் நன்றாக படிக்காத மாணவர்களை முட்டிப்போட வைத்தும், அடித்தும் தண்டனைக் கொடுக்கும் ஆசிரியர்கள் மத்தியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் பழகும்விதம் பெற்றோர்களிடத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் ஒழுங்காக படிக்காமல், தங்களின் அன்றாட செயல்பாடுகளால் எதிர்காலத்தை பற்றிக் கவலைப்படாமல் ஒழுங்கினமாக இருக்கும் மாணவர்கள் பின்னாளில் அதற்காக வருத்தப்படுவார்கள் என்பதால் அவர்களுக்குப் படிப்பின் அவசியத்தை புரியவைக்க மாணவர்களின் வழியிலேயே சென்று அவர்களுக்கு நல்லவிதமாக சொல்வாராம்.

இந்நிலையேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒழுங்காக படிக்காத பனிரென்றாம் வகுப்பு  மாணவனை அந்த வகுப்பு ஆசிரியர் வெளியில் முட்டிப்போட வைத்துள்ளார். அப்போது அந்த வழியே வந்த தலைமை ஆசிரியர் பாலு  அந்த மாணவனுக்கு முன்பு தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டு  கையெடுத்து கும்பிட்டு முட்டிப்போட்டு ஒழுங்காக படிடா இப்படியெல்லாம் இருக்காத டா என கெஞ்சும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 விழுப்புரம் காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் இவர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களிடத்தில் நன்றாகப் படிக்குமாறு அறிவுரை கூறுவதோடு நிறுத்திவிடாமல், சரியாக படிக்காத, பள்ளிக்கு ஒழுங்காக வராமல் இருக்கும் மாணவர்களின் வீடு தேடி சென்று படிப்பின் அவசியத்தை சொல்லிப் புரிய வைக்கிறாராம்.

மேலும் மாணவர்கள் முன் மண்டியிட்டு அவர்கள் நன்றாகப் படிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறார். அத்துடன் ஒழுக்கத்தைக் கற்பிக்கும் விதத்திலும் மாணவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றவராக இருக்கிறார்.

ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் இவர் இந்த செயலால் செயலால் அனைத்து ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் படிக்கும் ஆர்வத்தை எற்படுத்துகிறதாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!