
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பானை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டது.
இந்த அறிவிப்பானையில் B.E படிப்பில் 1st class'ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், எம்.இ படித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொறியியல் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்க மறுக்கப்படுவதை எதிர்த்து எம்.இ. பட்டதாரிதிலகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.இ படித்தவர்களின்விண்ணப்பங்கள் ஏற்க மறுப்பது முற்றிலும் தவறானது எனவும், இது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளுக்கு எதிரானது எனவும், வழக்கறிஞர் சங்கரன் வாதிட்டார்.
இதையடுத்து காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பானை ரத்து செய்தும் ஏஐசிடிஇ விதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பானை வெளியிட வெண்டும் எனவும்நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.