சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் – கமிஷனர் அலுவலகத்தில் மனு…

First Published Jul 5, 2017, 4:34 PM IST
Highlights
Want to ban the solvathellam unmai


ஜி தமிழ் தொலைகாட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆவடியை சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் வேப்பேரி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாகவது:

Zee தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமக்கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறி தினமும் ஒரு குடும்பம் என்ற முறையில் விவாகரத்தை அறிமுகம் செய்து விளம்பரம் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக பல குடும்பங்கள் பலியாக்கப்பட்டு வருகின்றன. குடும்ப பிரச்சனையை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்று தீர்வு காணலாம்.

இந்த நிகழ்ச்சியில் பழிக்குபழி, அடிதடி, தவறான வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்கள் நடைபெறுவதால் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

click me!