பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்…!!! உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி

Asianet News Tamil  
Published : Jul 05, 2017, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்…!!! உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி

சுருக்கம்

pan gutka ceased in chennai

சென்னை சூளையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா மற்றும் பான்மசாலாவை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை சூளையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு குடோனில் 100 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

அதிமுக கூட்டணியில் இணைந்தது பாமக..! திமுகவை வீழ்த்த.. கூட்டாக சூளுரைத்த அன்புமணி, இபிஎஸ்
வேலூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை! மோட்டர், செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.!