5 பவுன் தாலி செயின் பறிப்பு – தனியாக வந்த பெண்மணியிடம் கைவரிசை…!!!

Asianet News Tamil  
Published : Jul 05, 2017, 02:28 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
5 பவுன் தாலி செயின் பறிப்பு – தனியாக வந்த பெண்மணியிடம் கைவரிசை…!!!

சுருக்கம்

Handwriting To The Single Woman 5 pavun thanli chain snatch

கீழ்பாக்கம் அருகே தனியாக வந்த பெண்மணியின் கழுத்தி இருந்த 5 பவுன் தாலி செயின்னை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் தெரு சேர்ந்தவர் வனஜா.  இவர் நேற்று இரவு அதே தெருவில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் வனஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயின்னை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் வனஜா புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் கிழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல், வேப்பேரி புரசைவாக்கம் ஜான்சி தெருவை சேர்ந்தவர் சுதாகர். இவர் புரசைவாக்கம் தானா தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெபதங்கம்.

இந்நிலையில், இருவரும் நேற்று இரவு கடையை பூட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் ஜெபதங்கம் அணிந்திருந்த 12 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் சுதாகர் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக கூட்டணியில் இணைந்தது பாமக..! திமுகவை வீழ்த்த.. கூட்டாக சூளுரைத்த அன்புமணி, இபிஎஸ்
வேலூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை! மோட்டர், செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.!