நள்ளிரவில் உருவானது மாண்டஸ் புயல்.! ஊட்டி போல் மாறிய சென்னை..! தரைக்காற்று வீச்சு அதிகரிப்பு

By Ajmal KhanFirst Published Dec 8, 2022, 8:44 AM IST
Highlights

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு  புயலாக வலுப்பெற்ற நிலையில் சென்னையில் தரைக்காற்று பலமாக வீசத் தொடங்கியது. அதே நேரத்தில் சென்னை முழுவதும் ஊட்டி போல் குழுமையான வானிலை நிலவிவருகிறது
 

சென்னையை நெருங்கும் புயல்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில், இயல்பை விட 3 சதவிகித மழை குறைவாக பெய்துள்ளது. இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது.  மாண்டஸ் புயல்  வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , காரைக்காலுக்கு தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும் , சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி..!

மிக கன மழை எச்சரிக்கை

தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினம் (9ஆம் தேதி) நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தற்போது சென்னை மாநகர முழுவதும் தரைக்காற்று வீச தொடங்கியுள்ளது.

தமிழகத்தை மிரட்டும் புயல்..! 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

ஊட்டியாக மாறிய சென்னை

தரைக்காற்று வீச்சு அதிகரிப்பதன் காரணமாக மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்றைய தினம் தமிழக கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

கனமழை முன்னெச்சரிக்கை... திருவாரூர், தஞ்சையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

click me!