
உலக கோப்பை கபடி தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தர்மராஜ் சேரலாதனுக்கு இன்று சென்னை விமான நிலையத்தில் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில், ஆண்களுக்கான 3-வது உலகக் கோப்பை கபடி தொடர் அண்மையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா - ஈரான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தர்மராஜ் சேரலாதன். இந்திய அணி வெற்றிபெற இவரின் பங்கு முக்கிய பங்கு வகித்தது. வெற்றி பெற்ற இந்திய கபடி அணிக்கு வைகோ, ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இன்று சென்னை விமானம் நிலையம் வந்த தர்மராஜ் சேரலாதனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள, தாளம் முழங்க அவருக்கு வரவேற்பு
அளிக்கப்பட்டது. மேலும், தனது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம், திருச்சனம்பூண்டியில் மிகப் பெரிய அளவில் கபடி கிளப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். தமிழகத்ல் இருந்து அதிக கபடி வீரர்களை உருவாக்குவதே எனது லட்சியம் என்றும் தர்மராஜ் சேரலாதன் கூறினார்.