பூச்சு மருத்து குடித்து பட்டதாரி இளைஞர் தற்கொலை! ஐயோ என் புள்ள என்ன விட்டு போயிட்டானே.. கதறி துடித்த தாய்.!

Published : Jun 14, 2024, 11:02 AM ISTUpdated : Jun 14, 2024, 11:59 AM IST
 பூச்சு மருத்து குடித்து பட்டதாரி இளைஞர் தற்கொலை! ஐயோ என் புள்ள என்ன விட்டு போயிட்டானே.. கதறி துடித்த தாய்.!

சுருக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் கிருபாகரன்(25). இவர் மெக்கானிக் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும்  அரசு வேலைக்காக தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே போட்டித் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். 

ராணிப்பேட்டை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் கிருபாகரன்(25). இவர் மெக்கானிக் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும்  அரசு வேலைக்காக தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே போட்டித் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். 

இதையும் படிங்க: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு! தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் விடுதலை! ஐகோர்ட் தீர்ப்பு!

கடந்த வாரம் நடைபெற்ற குரூப்-4 தேர்வு எழுதிய அவர் சரியாக எழுதவில்லை என்று  புலம்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால்  ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தன்னுடைய விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தினை எடுத்து குடித்து மயக்கம் அடைந்துள்ளார். வாயில் நுரை தள்ளியதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை  மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  DA Hike: அரசு ஊழியர்களுக்கு காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 10 December 2025: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நடைபெறுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..