கல்வித் தொலைக்காட்சி சி.இ.ஓ. நியமனம் ரத்து... விரைவில் புதிய நியமனத்துக்கான அறிவிப்பு!!

By Narendran SFirst Published Sep 5, 2022, 6:06 PM IST
Highlights

அரசு கல்வி தொலைக்காட்சியில் புதிய சிஇஓ நியமனம் செய்யப்பட்ட நிலையில் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அரசு கல்வி தொலைக்காட்சியில் புதிய சிஇஓ நியமனம் செய்யப்பட்ட நிலையில் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக வீட்டிலிருந்தபடியே கல்வி கற்க பள்ளிக்கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி மாணவர்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலுக்குக் கல்வி தொலைக்காட்சிதான் பெரியளவில் உதவியது.

இதையும் படிங்க: தேர்வர்களே அலர்ட்.. தமிழக அரசின் 155 விரிவுரையாளர் காலி பணியிடங்கள்.. TRB வெளியிட்ட அறிவிப்பு..

அதன் காரணமாகவே திமுக ஆட்சி அமைந்த பின்னரும் கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக நான்கு ஆண்டுகளாக முதன்மைச் செயலாளர் இல்லாமல் இயங்கிவந்த கல்வி தொலைக்காட்சிக்கு அந்தப் பதவி உருவாக்கப்பட்டு, மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். சிஇஓவாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதிக்கு மாதம் 1.5 லட்சம் ஊதியம். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரூ.61,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. நாளை தான் விண்ணப்பிக்க கடைசி நாள்.. முழு விவரம்

மணிகண்ட பூபதி ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்றும் இவரது தலைமையின் கீழ் கல்வி தொலைக்காட்சி இயங்கினால் ஆர்.எஸ்.எஸ் சம்பந்தமான பாடங்கள் புகுத்தப்படும் என்றும் பலரும் விமர்சனம் செய்தனர். இதை அடுத்து அவரது நியமனத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மீண்டும் விண்ணப்பங்களை பெற்று தகுதி வாய்ந்த ஒருவர் நியமனம் செய்யப்படுவார் என்றும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

click me!