ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பதை அந்த மாணவியர்க்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அப்படி வழங்குவதை அரசு கடமையாக நினைக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுமை பெண் திட்டத்தை தொடங்கிய வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வி - சமூகநீதி - பெண்ணுரிமைத் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறோம். உயர்கல்வியிலும் - பள்ளிக்கல்வியிலும்- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையிலும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமைத் திட்டங்களின் மூலமாக தமிழ்ச்சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், பள்ளியில் படிக்க வரும் மகளிருக்கு, கல்லூரிக்கு வருவதற்குத் தடையும், தயக்கமும் இருக்கிறது. அந்தத் தடையை உடைப்பதற்குத்தான் இந்த புதுமைப் பெண் திட்டத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். படிக்க வைக்க காசு இல்லையே' என்ற கலக்கம் பெற்றோருக்கு இருக்கக் கூடாது. இன்றைக்கு மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயண வசதி செய்து தரப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு சமூகப் பொருளாதார விடுதலையை வழங்கி இருக்கிறது.
மேலும் படிக்க:இன்று 21 மாவட்டங்களில் கனமழை..எந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப் போகும் மழை.. வானிலை அப்டேட்
ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பதை அந்த மாணவியர்க்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அப்படி வழங்குவதை அரசு கடமையாக நினைக்கிறது. பள்ளியுடன் படிப்பை நிறுத்தி விடும் பெண்ணுக்கு 1000 ரூபாய் கிடைப்பதால் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். இதன் மூலமாகத் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவர் எண்ணிக்கை அதிகமாகும். அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின சமத்துவம் ஏற்படும்.
குழந்தைத் திருமணங்கள் குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். ஒவ்வொரு பெண்ணும் சொந்தக் காலில் நிற்பார்கள். யாருடைய தயவையும் அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். எதிர்பார்க்க வேண்டாம். எந்தக் கொடுமையையும், இழிவையும் அவர்கள் சகித்துக்கொண்டு, அடங்கிப் போக வேண்டாம் அனைவருக்குமான வளர்ச்சியின் உள்ளடக்கம் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்பதே! அதனை மனதில் வைத்துத்தான் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாதிரிப் பள்ளிகளும், தகைசால் பள்ளிகளும் இதே நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் படிக்க:முரசொலி ஒரு டாய்லெட் பேப்பர்... திமுகவை வச்சு செய்த அமர் பிரசாத் ரெட்டி.
முதல்கட்டமாக 171 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25 மாநகராட்சிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளியினுடைய கட்டடங்கள் நவீனமயமாக்கப்படும். கற்றல் செயல்பாடுகளுடன் சேர்த்து கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு ஆகிய அனைத்துத் திறமைகளும் மாணவர்களுக்கு உருவாக்கப்படும். அதாவது மாணவர்களின் பல்துறைத் திறன் வெளிக்கொண்டு வரப்படும் இவை அனைத்து மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து விரிவுபடுத்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும். புதுமைப் பெண் போன்ற ஏராளமான திட்டங்களைக் கொண்டு வருவோம். இவ்விழாவைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்திருக்கக்கூடிய தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை என்னுடைய நன்றி கூறி விடைபெறுவதா முதலமைச்சர் பேசி முடித்தார்.
மேலும் படிக்க:Go Back Rahul.. கோ பேக் மோடிக்கு பதிலடி.. அதகளம் செய்யும் அர்ஜூன் சம்பத் .