சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர் சவார்க்கர் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
சவார்க்கர் பிறந்த தினம்
விநாயக் தாமோதர் சாவர்க்கர், அவரது ஆதரவாளர்களால் வீர் சாவர்க்கர் என்றும் அழைக்கப்படுகிறார், தாமோதர் மற்றும் ராதாபாய் சாவர்க்கரின் தம்பதிக்கு 1883 மே 28 அன்று மகாராஷ்டிராவின் நாசிக்கில் பிறந்தார். சவார்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் ஆவார். இந்துத்துவா சித்தாந்தத்தின் ஆரம்பகால ஆதரவாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட சாவர்க்கர், சாவர்க்கர் இந்து மதம் மற்றும் இந்துத்துவாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் தீண்டாமை ஒழிப்பு நோக்கிப் பணியாற்றத் தொடங்கினார். சாதிவெறி மற்றும் தீண்டாமைக்கு எதிராக வலுவான குரல் கொடுத்தவர்.
ஆளுநர் ரவி மரியாதை
இந்தநிலையில் சாவர்க்கரின் பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர் ரவி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும்,
பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த… pic.twitter.com/Z4SuT2VGZ7
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn)
உறுதியான சுதந்திர போராட்ட வீரர்
16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர். எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர். அவரது தியாகங்கள், ஒன்றுபட்ட, வளர்ந்த மற்றும் வலிமையான பாரதத்தை அதன் பாரம்பரிய பெருமிதத்துடன் கட்டியெழுப்ப அனைத்து இந்தியர்களையும் ஊக்குவிக்கும் என ஆளுநர் ரவி பதிவிட்டுள்ளார்.