தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை.! பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ரவியின் கடிதத்தால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Aug 22, 2023, 10:48 AM IST

தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார். 
 


ஆளுநர்-தமிழக அரசு மோதல்

தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, ஆன்லைன் சூதாட்ட மசோதா பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரம், அரசு நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்புவரது  போன்றவற்றால் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே பாடத்திட்டம் கொண்டு வரும் தமிழக அரசின் திட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

Tap to resize

Latest Videos

பொது பாடத்திட்டம்- பின்பற்ற வேண்டாம்

இது தொடர்பாக அந்த கடிதத்தில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் வடிவமைத்த பொது பாடத் திட்டத்தை அமல்படுத்துமாறு மாநில உயர்கல்வித் துறை கட்டாயப்படுத்துவதாக கல்லூரிகளின் முதல்வர்கள், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் கவலை தெரிவித்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள், தங்களுக்கான பாடத் திட்டத்தை தாங்களே வடிவமைத்துக் கொள்ளலாம் என்று பல்கலைக் கழக மானியக் குழுவின் விதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யுஜிசி, தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள நிலையில் பொதுப் பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது எனவும் கூறியுள்ளார். உயர்கல்வி என்பது பொது பட்டியலில் இருப்பதால், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் வடிவமைத்துள்ள பொது பாடத் திட்ட முறையை பல்கலைக் கழகங்கள் ஏற்கத் தேவையில்லை என்றும்  ஆளுநர் அந்த கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளது மோதல் போக்கை அதிகரிக்க செய்துள்ளது. 

இதையும் படியுங்கள்

சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க முடியாது.? கோப்புகளை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி

click me!