Cuddalore Accident: கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி; 28 பேர் காயம்

By Velmurugan s  |  First Published Aug 22, 2023, 9:48 AM IST

கடலூர் மாவட்டம வடலூர் அருகே தனியார் பேருந்து கார், இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற ஜெய விலாஸ் என்ற தனியார் பேருந்து குறிஞ்சிப்பாடி அருகே வடலூர் நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அப்போது எதிர் திசையில் ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு சிலர் காரில் கடலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் எதிர்பாராத விதமாக கார் மீது  தனியார் பேருந்து மோதியது. இதில் காரில் பயணம் செய்த விக்டோரியா (வயது 65) என்ற முதியவர் சம்பவ இடத்திலே இறந்தார். மேலும் காருக்கு பின்னே  நெய்வேலியில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த தாமரைச் செல்வன், விஜயகுமார் இரண்டு பேர் மீதும் பேருந்து மோதியதிது. 

Vikram Lander தரையிறங்கப் போகும் சவாலான கடைசி 15 நிமிடங்கள்! நடக்கப்போவது என்ன?

விபத்தில், தாமரைச்செல்வன் மற்றும் விஜயகுமார் இருவரும் பேருந்தின் கீழே சிக்கிக் கொண்டனர். மூதாட்டி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வடலூர் காவல் துறையினர் உடனடியாக ஜேசிபி உதவியுடன் பேருந்தை தூக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்தில் பயணித்த 28 பேர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து சம்பந்தமாக  வடலூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

click me!