அறுவடைக்கு தயாரான.. பயிர்களை நாசம் செய்த என்எல்சி - வார்னிங் கொடுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Published : Jul 29, 2023, 04:04 PM IST
அறுவடைக்கு தயாரான.. பயிர்களை நாசம் செய்த என்எல்சி - வார்னிங் கொடுத்த  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சுருக்கம்

என்எல்சிக்கு எதிராக போராடிய பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

என்.எல்.சி நிறுவனம் விரிவாக்கத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர்.  அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர்.  இதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

பாமகவினர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில்,  காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியும் தண்ணீர் பீய்ச்சியும் காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர்.  நெய்வேலி வன்முறை சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பாமகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலியில் நடைபெற்ற கலவரத்தில் காயம் அடைந்த 20 காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள்.  

என்எல்சிக்கு எதிராக போராடிய பாமகவினர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது.  விவசாயிகள் விரோத போக்கை அரசு கைவிட வேண்டும். அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. சிலிண்டர் விலை முதல் வங்கி விடுமுறை வரை - முழு விபரம் இதோ !!

PREV
click me!

Recommended Stories

ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!
தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!