கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார்.. குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

By vinoth kumar  |  First Published Jul 29, 2023, 1:04 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சென்னையில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 


கடலூர் தேசிய நெடுஞ்சாலையோர தடுப்பு சுவரில் மோதி  கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சென்னையில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து.. உயிரிழப்பு 7ஆக உயர்வு..!

அப்போது கார் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கோமுகி ஆற்றங்கரையில் வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி அதன் பின்னர் கார் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. 

இதையும் படிங்க;- சென்னையில் திடீரென நில அதிர்வு? பீதியில் அலறியடித்துக்கொண்டு வெளியேறிய பொதுமக்கள்.. சாலையில் தஞ்சம்..!

இந்த விபத்தில் காரில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, அஜித், மதுமிதா, அவரது மாமியார் தமிழ்ச்செல்வி ஆகிய  4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!